ரயிலுடன் மோதி ஜீப் வாகனம் விபத்து ; நால்வர் படுகாயம்
அஹங்கம – கபலான பகுதியில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்தயிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலுடன் ஜீப் வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது ஜீப் வாகனத்தில் ஆறு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் நான்கு பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற ரயில்வே கடவையில் போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.