தந்தை விஜய் தொடர்பில் சஞ்சய் நெகிழ்ச்சி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது தந்தை விஜய் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை தவெக உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது தளபதி விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தனது தந்தையை அழைத்துச் செல்வேன் என்றும், பெற்றோரின் முழு ஆதரவு தனக்கு உண்டு என்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் தந்தையை அழைத்துச் செல்வேன்....
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு அப்பா விஜயின் பெயரை முதலில் குறிப்பிட்டார். சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சினிமாத்துறைக்கு வருவது குறித்து தனது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசியபோது அவர்கள் ஆதரவு அளித்ததாகவும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் முதலமைச்சர் விஜய் இன் குடும்ப வாழ்க்கை தொடர்பில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு மகன் சஞ்சை அளித்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இயக்குனர் சஞ்சையின் பேட்டி சமூக வலைத்தளங்க்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.