பேய் வீட்டில் ஒரு இரவு தங்கினால் 52 ஆயிரம் சம்பளம்; எங்கே தெரியுமா?
ஜப்பானில் யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் நாட்டில் பல வீடுகள் குறிப்பாக கிராமப்புறங்களில் கட்டப்படும் பல வீடுகள் யாரும் குடியிருக்காமல் அப்படியே கைவிடப்பட்டு வருகின்றன.

வயதானவர்கள் தனியாகவே வசிக்கிறார்கள்
அதற்கு காரணம் தாய் தந்தை இறந்ததும் அவர்களின் மகன்கள் வேலை வாய்ப்புக்காகவும், தொழிலுக்காகவும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
ஒருபக்கம் ஜப்பானில் வயதானவர்கள் அதிக வருடங்கள் தனியாகவே வீட்டில் வசிக்கிறார்கள்.
அவர்கள் இறப்புக்கு பின்னரும் பல வீடுகள் கைவிடப்படுகிறது. அப்படிப்பட்ட வீடுகளில் பேய்கள் வசிப்பதாகவும் ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஒருபக்கம், ஜப்பானில் ஒரு வீடு வாடகைக்கு விடுவதோ அல்லது விற்பதோ சுலபமில்லை.
அங்கே நிறைய விதிமுறைககளை பின்பற்றவேண்டும். மேலும், அதிக வரி செலுத்த வேண்டும். இதனாலே பலரும் வீட்டை அப்படியே விட்டுவிடுகிறார்கள்.. இந்நிலையில்தான், ஜப்பானில் வீடுகளை விற்பதற்கு வீட்டின் சொந்தக்காரர்கள் ஒரு புதிய ஐடியாவை கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருப்பவர்கள் இறப்பது, தீ விபத்து, தற்கொலை செய்து கொள்வது போன்ற காரணங்களால் பல வருடங்களாக யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அப்படி தங்கவைத்தால் அந்த வீட்டை வாங்க முன்வருவார்கள் என ஜப்பானியர்கள் நம்புகிறார்கள்.