யாழ். நல்லூரில் சர்ச்சையை ஏற்படுத்திய பௌத்த பிக்குகளின் செயல்
யாழ். நல்லூர் கந்த சுவாமி பெருந்திருவிழா காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கடந்தாண்டை போல இந்தாண்டும் நடந்த விதிமீறல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் சமூக வலைத்தளப்பதவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 15.09.2023 திகதிய வர்த்தமான பத்திரிகையின் படியான அறிவுறுத்தல்களில் 9ம் பிரிவையும், 16ம் பிரிவையும் நடைமுறைப்படுத்த படத்திலுள்ள வாகனம் நுழைந்த சந்தர்ப்பத்தில் அங்கே வீதித்தடை பணியில் இருந்தவர்கள் தவறியுள்ளார்கள்.
ஆகையால் மேற்குறித்த வர்த்தமான பத்திரிகைக்கமைய குறித்த இரு வாகனத்தார் மீதும், கடமையிலிருந்தோர் மீதும் யாழ் மாநகரசபை சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.
அல்லது, 9ம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளபடி, மாநகரசபை நீர் விநியோக வண்டி முன்னே செல்வதால் பின்னே நிற்கும் வாகனங்களை கழிவகற்றும் வாகனங்களாக கருதி உள்நுழைய அனுமதி கொடுத்தார்களா என்பதை மாநகரசபை விளக்க வேண்டும்.
செய்வார்களா? பாரத பிரதமராயினும் உரிய நேரத்துக்கு மேலங்கியின்றி வா என திருப்பியனுப்பிய நல்லூரானிடம் கடந்தாண்டை போல இந்தாண்டும் நடந்த விதிமீறல் இடம் பெற்றுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.