தமிழ் தேசியத்தை 'அபத்தம்' என்று கோரியவர்களை சந்தித்துப் பேசினார் சுமந்திரன்!!
தென்னிலங்கை தரப்புக்களுக்கு வாக்களிக்க கோரிய 15 விரிவுரையாளர்கள் சுமந்திரனை சந்தித்தது அம்பலமாகியுள்ளது.
தமிழ் தேசியத்துக்குச் சார்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக மாணவர்கள், பேராசிரியர்கள் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தென்னிலங்கைத் தரப்புக்களிற்கு ஆதரவு கோரியும், தமிழ்த் தேசிய வழியில் செயற்படுவது அபத்தம் என்றும் அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர் குழுவில் சிலர் அண்மையில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள திரு.எம்.ஏ சுமந்திரனைச் சந்தித்து கலந்துரையாடிய புகைப்படம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொழிற்படுகின்ற நிலையில், அதன் உடன்பாடுகளின்றி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததோடு, அது பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார ஊழியர்களிடையே பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
பல்கலைக்கழக சமூகம் திறந்த மடல் ஊடாகவும், ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் தமிழ் மக்களை தேசமாக அணி திரள்வதற்கும், தமிழ்ப் பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதற்கும் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.