யாழில் இளைஞர்கள் நடத்திய கொடூர செயல்... இருவர் சிக்கினர்!
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாயை வெட்டிக் கொல்லும் போது, சந்தேக நபர்கள் தாமே அதை காணொளியாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், குறித்த மூவரை ஊர்காவற்துறை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மூன்று சந்தேக நபர்களில் இருவரை பொலிஸார் இன்று (04-08-2022) கைது செய்துள்ளனர்.
நாயை வெட்டிக் கொல்வதற்கு காரணமாக இருந் பிரதான சந்தேக நபர் வன்னிக்கு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சந்தே நபர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு நாயை கொடூரமாக வெட்டிக் கொன்றதாக பொலிஸ் விரசனைகளில் இருந்து தெரியவருகிறது.
யாழில் இரு இளைஞர்களின் கொடூர செயல்!