யாழ் . போதனா வைத்தியசாலை கழிவுகள் ; ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோப்பாய் நன்னீர் திட்டம் , விவசாய நிலங்களுக்கு அருகாமையில் , உள்ள வெற்றுக்காணிக்குக்குள் வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனத்தில் , வைத்தியசாலையின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
அதனை அவதானித்த ஊரவர்கள் , கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் போது தாம் நீதிமன்ற அனுமதி பெற்றே நாம் இவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவதாக கூறியுள்ளனர்.
அதனை அடுத்து அப்பகுதி மக்கள் அது தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கும் அறிவித்த நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் அதற்கு தீ வைத்து விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்து , சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.