யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்.மீசாலையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-12-21) பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை புத்துார் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் 35 வயதான மீசாலை வடக்கை சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லுாரி ஆசிரியரான கந்தசாமி சுதாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் வீதியை கடக்க மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீதியில் காத்திருந்தபோது சாவகச்சோியிலிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆசிரியர் மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது, தலையின் பின்புறம் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்
11 நாட்களின் பின்னர் நேற்றய தினம் (08-12-21) அவர் உயிரிழந்துள்ளார்.