மாவீரர் தினத்தினை முன்னிட்டு முடங்கியது யாழ்ப்பாணம்
மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பானம் . தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன.
தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

மாவீரர்களின் நினைவேந்தல்
அதேவேளை மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது.
தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது நிகழ்வில், பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


