வரலாற்று சிறப்பு மிக்க யாழ் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்று மிக சிறப்பாக இடம்பெற்ற தேர்த்திருவிழா (Photos)
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்மானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (09) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பக்தர்கள் புடை சூழ செல்வ சந்நிதி முருகன் தேரேறி அருபாலித்த தருணம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. ஈழத்தில் மிகவும் புகழ் பெற்ற முருகன் ஆலயங்களில் செல்வ சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
ஆவணி மாதத்துப் பூரணைக்கு முந்திய அமாவாசை நீங்கிப் பிரதமை கூடும் வேளையில் கொடியேற்றம் ஆவணிமாதப் பூரணையில் தீர்த்தத் திருவிழாவுடன் சந்நிதி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும்.
செல்வ சந்நிதி ஆலய பெருமை
இங்கு நிகழும் கொடியேற்றம் ஆகம மரபு சார்ந்த ஏனைய கோயில்களின் கொடியேற்றம் போன்றதல்ல தனித்துவமானது.
இங்கு கொடிக்கம்பமும் இல்லை. மேலும் திருவிழாக் காலங்களில் இக்கோயிலுக்கேயுரிய சிறப்பான அலங்காரங்களோடு சுவாமி வீதிவலம் வருவார்.
இந்நிலையில் இன்றையதினம் செல்வ சந்நிதி முருகன் பக்தர்களுக்கு தேரேறி வந்து தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தமை அவன் அடியவர்களுக்கு ஆனதத்தை ஏற்படுத்தியது.