யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் காலமானார்
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற், தனது பணிவாழ்வில் பல்வேறு பங்குகளிலும் மறைமாவட்டப் பொறுப்புகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.

அவர் மயிலிட்டி, இளவாலை மற்றும் பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும், சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை மற்றும் பரந்தன் ஆகிய பங்குகளின் பங்குத்தந்தையாகவும், ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குநராகவும், மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும், வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் அவர் தனது ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
நீண்டகாலமாக கத்தோலிக்க திருச்சபைக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி, அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாற அனைவரும் மன்றாடுவோம்.