யாழ் பருத்தித்துறை சந்தை வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டடத்துக்கு இடம் மாற்றுவது தொடர்பில் மரக்கறி வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிரகாரம், இன்று (22) வரை புதிய கட்டடத்துக்கு மறக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு நடைபெற்றது.
இதன்போது இவ்வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மரக்கறி சந்தை வழமை போல் தற்போது இயங்கி வரும் இடத்தில் இயங்க முடியும்.
மேலும் இந்த வழக்கில் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தார்.