யாழ். நீதிமன்றத்தில் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு தள்ளுபடி
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனை கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
அந்த தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடையை விதிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பான வாதங்களை அதன் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்வைத்தார்.
இதனை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகனின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.