யாழ்.பலாலி இராணுவ முகாமில் திடீரென உயிரிழந்த இராணுவ அதிகாரி!
Sri Lanka Army
Jaffna
Heart Attack
Death
By Shankar
யாழ்ப்பாணம் - பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய சார்ஜன் தர அதிகாரி ஒருவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குருநாகலைச் சேர்ந்த 35 வயதான ரவித்த ரங்கன திசாநாயக்க எனும் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (22-12-2024) காலை நெஞ்சுவலி காரணமாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி நண்பகல் உயிரிழந்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US