யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்... தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (24-12-2024) மானிப்பாய், சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அராலி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சண்டிலிப்பாய் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவ்வீதியால் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.