யாழ் மாவட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சமூகத்திற்கு விழிப்புணர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தோடு போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் அதிகமாக நுகர்கின்ற தன்மை காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களுக்கு சமூகத்தின் மாற்றத்தில் பாரிய பங்களிப்பு இருப்பதாகவும் கடமைக்கு மேலதிகமாக மாற்றத்தை கொண்டு வர திடசங்கற்பம் பூண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்.
ஒவ்வொருவரது வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்.