15 வயது சிறுமியை சீரழித்த தாயின் இரண்டாவது கணவன்
மொனராகலையில் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

வைத்திய பரிசோதனை
இந்த சிறுமி கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிற்குள் வைத்து தனது தாயின் இரண்டாவது கணவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து இந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுமியின் தாய் இது தொடர்பில் பிபில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான தாயின் இரண்டாவது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி வைத்திய பரிசோதனைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.