யாழில் மாமியாரை வெட்டிக் கொன்ற அரசாங்க அதிகாரி ; உதவிய தந்தைக்கு நேர்ந்த நிலை
மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி பகுதியை சேர்ந்த வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியின் தாயாரை வெட்டி படுகொலை செய்ததுடன் , மனைவியின் தந்தையை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி கடும் காயங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியல்
குறித்த நபர் படுகொலை செய்ய மற்றும் கடும் காயங்களை விளைவிக்க பயன்படுத்திய வாளினை மறைத்து வைக்க உதவிய குற்றச்சாட்டில் அந்நபரின் தந்தையாரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரையும் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.