யாழில் வாசிக்கும் நபரொருவர் வெளியிட்ட ஆதங்கம்!
யாழ்.மக்களில் பலர் தமது வாகனத்துக்கு மட்டும் பெற்றோல் நிரப்பினால் போதும் என்று நினைக்கிறார்கள். இதனால் தான் யாழில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது என யாழில் வாசிக்கும் நபரொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு யாழில் வாசிக்கும் நபரொவர் கருத்து தெரிவிக்கையில்,
கையிருப்பில் எரிபொருளை பகிர்ந்து வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
எல்லோருக்கும் எரிபொருள் தேவை. ஆனால் இங்கே பலர் எரிபொருளை வாகனத்துக்கு நிரப்பிவிட்டு, அதனை பரல்களில் நிரப்புவுதோடு, மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பரல்களில் எரிபொருளை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.
முதலில் நாம் திருந்த வேண்டும். அரசை குறை கூறிக்கொண்டு இருப்பதில் பிரயோசனம் இல்லை. ஊழல் இல்லாத அரசியவாதி ஆட்சிக்கு வரும் வரைக்கும் இது மாறாது. என்று அவர் கூறியுள்ளார்.