யாழ் மீனவர்களை தேடும் பணி துரித கதியில் முன்னெடுப்பு
கடந்த 15 ஆம் திகதி கடலுக்கு சென்று காணாமல்போயுள்ள யாழ் மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
காணாமல்போன யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கை
மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மீனவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கி நிலையில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
சம்பவத்தில் 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.