அவசரமாக கூடவுள்ள யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி!
யாழ்.மாவட்டத்தில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட கொரோனா செயலணி அவசரமாக கூடவுள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய் காலை 10 மணிக்கு கூடவுள்ள மாவட்ட கொரோனா செயலணி நிலைமைகளை ஆராயவுள்ளது.
இது குறித்து மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான க.மகேஸன் கூறுகையில்,
சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய துறைசார் அதிகாரிகளுடன் குறித்த செயலணி கூட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்த செயலணி கூட்டத்தின்போது யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் குறித்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.