கடத்தல் வழக்கு; கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதி
லலித், குகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் காணொளி வாயிலாக சாட்சியமளிக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

கோத்தபய ராஜபக்ச உட்பட பலர் மீது குற்றம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டங்களை ஒழுங்கமைத்த இவர்கள், அரச புலனாய்வுப் பிரிவினராலும் இராணுவத்தினராலும் கடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பான வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் செல்ல கோட்டாபய மறுத்து வந்தார்.
இந்நிலையில் காணொளி வாயிலாக சாட்சியமளிக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.