யாழ் சாவச்சேரியில் தனியார் பஸ் மீது மோதிய இ.போ.ச பேருந்து! பயணிகளின் நிலை
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (13-12-2023) பிற்பகல் மீசாலை சந்திப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து மீசாலை சந்திப் பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளையில் அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இதேவேளை, விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.