கிளிநொச்சியில் யாழில் இருந்த வந்த பேருந்து - டிப்பர் வாகனம் கோர விபத்து
கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
முந்தி செல்ல முற்பட்ட போது விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது, அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.