யாழில் தொடரும் சோகம்; குழந்தை பிரசவித்து 10 நாட்களான தாய் உட்பட 8 பேர் பலி!
யாழில் கொரோனா அபாயம் அதிகரித்துவரும் நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டகுழந்தை பிரசவித்து 10 நாட்களான தாய் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
குறித்த தாயார் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசுவிற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
சம்பவத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது -33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இதேவேளை கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் , இவர்கள் இருவர் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.