சமையல் கட்டில் இதை கடைப்பிடித்தால் போதும்; உங்க வீட்டில் தனமும் தானியமும் குறையவே குறையாது!
நம்முடைய சமையல் கட்டில் அன்னபூரணி வாசம் செய்வதாக நம் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
இந்த சாஸ்திரங்களின்படி அன்னபூரணி வாசம் செய்யும் இடமான சமையல் கட்டை எப்பொழுதும் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும்.
சமையல் கட்டில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? இதனால் தனமும், தானியமும் பெருகுமா? என்கிற ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவில் இனி அறிந்து கொள்ள போகிறோம். தனம் என்றால் செல்வம், பணம் என்பதை குறிக்கிறது.
அது போல தானியம் என்றால் சமைக்கக்கூடிய அத்தனை பொருட்களையும் சேர்த்து தான் அவை குறிப்பிடப்படுகிறது. செல்வ வளமும், குறைவில்லா உணவும் கிடைக்க ஒரு மனிதன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த கொடுப்பினை அமைவதற்கு வீட்டில் சமையல் அறை சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும். அக்னி மூலையில் அடுப்பை அமைப்பது தான் வாஸ்து முறையாகும்.
இப்படி அமைக்கப்பட்ட சமையல் அறையில் கண்டிப்பாக ஒரு சிறு அன்னபூரணியின் படத்தை மட்டுமாவது ஒட்டி வையுங்கள். கிழக்கு முகமாக பார்த்து அன்னபூரணியை பிரதிஷ்டை செய்யுங்கள். பிரதிஷ்டை செய்த அன்னபூரணிக்கு தினமும் முடிந்தால் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.
இல்லையேல் சிறு பூக்களை சாற்றி மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கிக் கொள்ளுங்கள் போதும். ஒரு நாளில் நீங்கள் சமைத்த உணவானது கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் கழுவி துடைத்து விடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? சாதத்தை வீணாக்க கூடாது என்பது வேறு, அதே போல சாதத்தை வழிக்க கூடாது. இப்படி செய்தால் வறுமை உண்டாகும் என்ற ஒரு நியதி உண்டு.
எனவே சிறிதளவு சாதத்தை பாத்திரத்தில் விட்டு விட்டு அனைவரும் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இந்த ஒரு பிடி சாதத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வையுங்கள். இதை அன்னபூரணியின் படத்திற்கு முன்பு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரவில் எச்சில் பாத்திரங்களை அப்படியே போட்டு வைக்க கூடாது. பயன்படுத்தும் கரி துணியை ஒரு முறை அலசி காய வைத்து விட வேண்டும்.
மீண்டும் மீண்டும் ஒரே துணியை பயன்படுத்தக் கூடாது இது தரித்திரத்தை ஏற்படுத்தும். சாதத்தை பாத்திரத்தில் வைத்து அருகில் ஒரு சிறிய அளவில் டம்ளர் ஒன்றில் முழுமையாக தண்ணீரை நிரம்ப வைத்து விடுங்கள். பிறகு காலையில் எழுந்து பாருங்கள் சிறிதளவு தண்ணீர் கண்டிப்பாக குறைந்து இருக்கும். இப்படி குறைந்திருந்தால் உங்களுடைய இல்லத்தில் அன்னபூரணியின் வாசம் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
இதனால் குறைவில்லாத தனமும், தானியமும் இனி பெருகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அப்படி குறையாமல் முழுக்க நிரம்ப அப்படியே இருந்தால் அன்னபூரணி அங்கு இல்லை என்பது அர்த்தம். பொதுவாகவே பூஜை அறையில் வைக்கப்படும் தண்ணீர் சிறிது நாட்களில் குறைய ஆரம்பிக்கும்.
இது அறிவியல் ரீதியாக ஆவியாதல் காரணமாக நடக்கிறது. ஆனால் ஒரே நாளில் குறைவதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? தண்ணீர் குறையாதவர்கள் கண்டிப்பாக உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்து பழகுங்கள். அன்னதானத்தை விட சிறந்த தானம் எதுவுமே இருக்க முடியாது.
ஒருவரின் பசியாற்றிய புண்ணியம் உங்களை ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரும். உங்களுடைய சந்ததியினருக்கும் அது வந்தடையும் எனவே வறுமை இல்லாமல் இருக்க மாதம் ஒரு முறையாவது அன்னதானம் செய்யுங்கள். முடிந்தால் ஒருவருக்கேனும் உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் மிகவும் சிறப்பு.