இதெல்லாம் ஒரு குத்தமாடா? தாலிகட்ட வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி!(Video)
வரதட்சணை கேட்ட மணமகனை மரத்தில் கட்டி வைத்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருமணத்தில் தகராறு
உத்தரபிரதேசத்தின் ப்ரதாப்கர் பகுதியை சேர்ந்தவர் அமர்ஜீத் வர்மா. இவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்தது.
திருமண நாளில் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட ஆசையாக காத்துக் கொண்டிருந்த நிலையில், திருமணம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அதாவது மாலை மாற்றிய பிறகு மணமகன், மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டதாக தெரிகிறது.
प्रतापगढ की तस्वीरें देखिए
— Rahul Sisodia (@Sisodia19Rahul) June 15, 2023
दूल्हे ने किया शादी से इंकार ,दूल्हे को बंधक बनाकर दी गई तालिबानी सज़ा#pratapgarh pic.twitter.com/OtqTdzNj5A
இதனையடுத்து மணமகள் வீட்டார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், வரதட்சணை கண்டிப்பாக வேண்டுமென மணமகன் கூறிவிட, கோபத்திற்குள்ளான மணமகள் வீட்டார் மணமகனை மரத்தில் கட்டி வைத்துவிட்டனர்.
மணமகன் மரத்தில் கட்டப்பட்ட தகவல் மந்தட்டா போலிசாருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மணமகனை விடுவித்தது கைது செய்தனர்.
அதேவேளை திருமண நாளில் அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதாலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது முற்றிய நிலையில் மணமகனை கட்டிவைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.