மருத்துவமனை மீது இஸ்ரேல் ஈவிரக்கமற்ற தாக்குதல்; 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அஹ்கிலி அல் அராபியில் உள்ள பப்டிஸ்ட் மருத்துவமனை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பாலஸ்தீனிய ஜிகாத் அமைப்பின் ரொக்கட் தாக்குதலே இதற்கு காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலின் விமானதாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸின் ரொக்கட் ஒன்று தவறுதலாக விழுந்து வெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என முதலில் தெரிவித்த இஸ்ரேல், பின்னர் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் ரொக்கட்டே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு இதனை நிராகரித்துள்ளது.
அதேவேளை ஏற்பட்ட சேதங்களின் அளவை பார்க்கும்போது இது இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் ரொக்கட் தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட இழப்பு இல்லை என தெரியவருவதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.