ஈரானின் பயங்கரவாத ஆட்சி ;முன்னாள் உச்ச தலைவர் விமானத்தை சிதைத்த இஸ்ரேல்
ஈரான் முன்னாள் உயர் தலைவர் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கொமெய்னி பயன்படுத்திய விமானம் தாக்கி அழிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் விமான படை தெரிவித்துள்ளது.
ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில், கொமெய்னி பயன்படுத்திய விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஈரானின் பயங்கரவாத ஆட்சி
இதனை இலக்காக கொண்டு இஸ்ரேல் விமான படை இன்று தாக்கி, அதனை அழித்து உள்ளது. இதனால், ஈரானின் இராஜதந்திர ஸ்திர தன்மைக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பாக இது பார்க்கப்படுகின்றது.
ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் தலைவருடைய விமானம், தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அழிக்கப்பட்டு விட்டது என இஸ்ரேல் விமான படை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
நவீன இராணுவ ஆயுத கொள்முதலுக்கும் மற்றும் கூட்டணி நாடுகளுடன் உறவுகளை பராமரிப்பதற்கும் இந்த விமானம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த சூழலில், விமானம் தகர்ப்பால், ஈரானின் பயங்கரவாத ஆட்சியின் தலைமைக்கும் கூட்டணி நாடுகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை பாதிப்படைய செய்துள்ளோம்.
இராணுவ அதிகார கட்டமைப்பையும் தகர்த்து இருக்கிறோம் என்று இஸ்ரேலின் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.