திண்டாடும் உலக நாடுகள் ;துணிவிருந்தால் வாருங்கள்; ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை!
வளைகுடாவில் நிலவும் போர் பதற்றத்தினால் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் பெரும் எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்றது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக கப்பல் போக்குவரத்து விசேட நிபந்தனைகளின் கீழ் இடம்பெற்று வருவதாக அவர் (Esmail Baghaei) குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப் படைகளின் வசம் இருப்பதாகவும், தனது தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு ஒரு கடற்கரை நாடு என்ற ரீதியில் ஈரானுக்கு உரிமை உண்டு என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் (Esmail Baghaei) கூறியுள்ளார்.
வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலனாக ஈரான் இருந்து வந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் (Esmail Baghaei) குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேசமயம் உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை, தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் கடுமையாகத் தெரிவித்துள்ளது.