இதுவல்லவா உல்லாச உலகம்; ReeCha Organic Farm இல் குதூகலித்த மாணவர்கள்! (Video)
இலங்கையில் வடமாகாணத்தில் பெரும் சுற்றுலா தலமாக மாறியுள்ள ReeCha Organic Farm இல் பாடசாலை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்ததுடன், தங்கள் இனிய சுற்றுலா அனுபவத்தையும் பகிர்ந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு சிறந்ததொரு நல்ல பொழுதுபோக்கு இடமகவும் ReeCha Organic Farm உள்ளது. ReeCha Organic Farm, புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் செல்லும் மக்கள் மட்டுமல்லாது, உள் நாட்டில் வசிக்கும் மக்களும் ஒருதடவையாவது நாம் செல்ல வேண்டும் என்கிற ஆசையினை தூண்டியுள்ளது என்றுதால் கூறவேண்டும்.
மக்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது
எமது தமிழர் பிதேசத்தில் மிபெரும் பிரமாணமாய் உருவாகியுள்ளதுதான் ReeCha Organic Farm. இங்கு செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உணவு, சுற்றிப்பார்ப்பதற்கு இடங்கள், சிறுவர்களுகான விளையாட்டுக்கள், பெரியோர்களின் மனதை கவரும் இயற்கை என அனைத்து மக்களையுமே கவரக்கூடியதாக ReeCha Organic Farm உள்ளது.
அதுமட்டுமல்லாது இளையோர்களின் மனதை கவர்ந்த பொழுதுபோக்கு இடமாகவும் ReeCha Organic Farm உள்ளது. இயற்கை அழகுடன் கூடிய விவசாய பண்ணை பார்க்கும் இடமெங்கும் பச்சைப் பசேலென பசுமையாக காட்சி அளிக்கும் இயற்கை அழகுடன் கூடிய ReeCha Organic Farm இற்கு சென்றவர்களின் மனங்களை மீண்டும் ஒருமுறை அங்கு செல்லத்தூண்டும் என்பதில் ஐயமில்லை.