பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லையா? காரணம் என்ன தெரியுமா
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 5 சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது, இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் இல்லை எனவும் இதற்கு தீபாவளி கொண்டாட்டம் தான் காரணம் என தகவல்கள் பரவி வருகின்றன.
பிக்பாஸ் சீசன் 5 யில் நாள்தோறும் சண்டை சச்சரவு என பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் எதாவது ஒரு பிரச்சனை நடப்பதும் அதற்கு கமல் வந்து பஞ்சாயத்து செய்வதும் வழக்கமாகி விட்டது.
இதேவேளை நேற்று (01) திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்று உள்ளது. அதன் பின் போட்டியாளர்களுக்கு மேலும் ஒரு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. நீங்கள் எந்த இரண்டு போட்டியாளரை காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறீர்கள் என சொல்ல வேண்டும் என ஒவ்வொருவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வார நடந்த பிரச்னையை மறந்து சுருதி தாமரையை காப்பற்ற வேண்டும் என சொல்கிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப முக்கியம் என தான் நினைப்பதாக சொல்கிறார். மேலும் அக்ஷராவும் தாமரையை காப்பாற்றுவதாக சொல்கிறார். இப்படி ஒவ்வொரு போட்டியாளராக வந்து சொல்வது இன்றைய நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.
அப்போ இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எப்படி இருந்தாலும் இந்த வார இறுதியில் தீபாவளி பண்டிகை காரணமாக எலிமினேஷன் இல்லை என சொல்ல போகீறீர்கள், பிறகு எதற்கு நாமினேஷன் ட்ராமா என மேலும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.