நம் முன்னோர்களின் ஆரோக்கிய ரகசியம் இதுதானா?
தானியங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய முக்கியமான சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளன.
அக்காலத்தில் நம் முன்னோர்கள் வலிமையான உடலுடன் நோயின்றி நீண்ட காலம் வாழ்ந்ததன் ரகசியமே தானியங்களை தங்களின் உணவில் அதிகம் சேர்த்து வந்தது தான்.
அதுவும் ராகி என்னும் கேழ்வரகை நம் முன்னோர்கள் அதிகம் உட்கொண்டு வந்தனர்.
ராகியானது உடலில் பலவிதமான மாயங்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது.
முக்கியமாக உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவக்கூடியது. இது தவிர பல நோய்களின் அபாயங்களைத் தடுக்கக்கூடியது.
ராகியை, ராகி கூழ், ராகி தோசை, ராகி இடியாப்பம், ராகி இட்லி என்று பலவாறு உட்கொள்ளலாம்.
ராகி உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவற்றை தினமும் உட்கொள்வது நல்லதல்ல. ஆனால் வாரத்திற்கு 2-3 முறை உணவில் சேர்க்கலாம்.
தசைகளுக்கு நல்லது
ராகியில் புரோட்டீன் அதிகம் உள்ளன. அதோடு இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களான வேலின், த்ரோயோனைன், ஐசோலூசின், மெத்தியோனைன் மற்றும் டிரிப்டோபான் ஆகியவை உள்ளன.
இவை தசைகளின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், வளர்ச்சி ஹார்மோன்களின் வெளியீட்டை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும்
ராகியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. எனவே இதை உட்கொள்ளும் போது அது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து தேவையில்லாத உணவுகளின் மீதான ஆர்வத்தைத் தடுக்கிறது.
இதன் விளைவாக எடை இழப்பிற்கு உதவுகிறது. முக்கியமாக ராகியில் ட்ரிப்டோஃபேன் என்னும் ஒரு வகையான அமினோ அமிலம் உள்ளது.
இது பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, எடை இழப்புக்கு உதவி புரிகிறது.
முதுமையைத் தடுக்கும்
ராகியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள லைசின் சருமத்தில் அரிப்புகள், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுப்பதோடு, சரும செல்கள் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
தலைமுடிக்கு நல்லது
ராகியில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. இந்த புரோட்டீன் குறைவாக இருக்கும் போது தான் தலைமுடி உதிரத் தொடங்குகிறது.
எனவே உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், ராகியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
எலும்புகளுக்கு நல்லது
தானியங்களிலேயே ராகியில் தான் கால்சியம் அதிகமாக உள்ளன.
கால்சியமானது எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் இன்றியமையாதது.
கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் பிரச்சனையைத் தடுக்கும்.
எனவே உங்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயைத் தடுக்கும்
ராகியை அடிக்கடி ஒருவர் தங்களின் உணவில் சேர்த்து வந்தால், அது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ஏனெனில் ராகியில் பாலிபீனால்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன.
இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, நிலையாக பராமரிக்கவும் உதவுகிறது.
செரிமானத்திற்கு நல்லது
ராகியில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்களானது, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகி குடலில் பயணிக்க உதவுகின்றன.
ராகியானது குடலியக்கத்தை சீராக்குகிறது. எனவே செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் அதைத் தடுக்க ராகியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம் செரிமான மண்டலமும் சிறப்பாக செயல்படும்.
புற்றுநோயைத் தடுக்கும்
ராகியில் நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.
அதுவும் ராகியில் உள்ள லிக்னன் என்னும் ஒரு வகையான சத்து, குடலால் மமாலியன் லிக்னானாக மாற்றப்பட்டு பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.
எனவே ராகியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.