இந்திய வானூர்தி போக்குவரத்து துறை முடங்கும் அபாயம்?
இந்தியாவின் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA), வானூர்தி துறை சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடி குறித்து மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் ஐந்தாவது பெரிய வானூர்திப் போக்குவரத்து சந்தையான இந்தியாவில், போரும், ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டதும் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளன.

அதனுடன், சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, நீண்ட தூர வானூர்தி பயணங்களுக்கான இயக்கச் செலவு (Operating Cost) பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் வானூர்தி எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர்தி நிறுவனங்கள் கோரியுள்ளன.