பாலத்துக்கு கீழ் மிதந்தது சடலமா? தேடுதல் பணி தீவிரம்! பரபரப்பான ஓட்டமாவடி
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று 3 மணியளவில் சடலமொன்றின் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்த த தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ளனர்.
இந்த நிலையில், கிரான் பகுதியில் காணாமல் போன மாணவர்களின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும் சுழியோடிகள் ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் பணியில் ஈருபட்டுள்ளனர்.
மேலும் , இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்றைய தினம் மாணவர்கள் சிலர் கடலுக்கு நீராடச்சென்ற நிலயில் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





