இலங்கையில் பெரும் அவலம் - உணவிற்கு பதிலாக நீரை அருந்தும் மக்கள்
உணவு மற்றும் பானங்களின் விலையில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட அதிகரிப்பால் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் உணவு நுகர்வு சுமார் ஐம்பது சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஹோட்டல்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் பாதிப்பு
அத்துடன் உணவகங்களுக்கு வந்து ஒன்று அல்லது இரண்டு கோப்பை நீர் பருகிவிட்டு உணவை பாரத்துவிட்டு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் சுமார் 80 வீதமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதென அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
வறுமையில் மக்கள்
தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் வேலையை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளனர்.
எரிபொருள் பிரச்சனை தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.