வரலாற்றில் முதல் முறை நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம்
வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்றும், நெடுந்தீவு குடியிருப்பாளர்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளை வாங்க அனுமதிக்கும் என்றும் கூறினார்.
அதேவேளை நெடுந்தீவில் உள்ள ஜெனரேட்டருக்கு எரிபொருளைக் கொண்டு செல்ல கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் எடுக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்