உலக முடிவை பார்வையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பதுளை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற நபர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்டு லுணுகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்வானை பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லுணுகலை வைத்தியசாலையில் அனுமதி
இன்று காலை குறித்த நபர்கள் மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிய உலகம் முடிவு பகுதியை பார்வையிட்டு கொண்டிருந்தபோது குளவி கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.
எலமான் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான ஒரு நபரை காப்பாற்றி லுணுகலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் நால்வரை மடூல்சீமை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து லுணுகலை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள்.
மேலும் நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகி பாதிப்படைந்த நிலையில் அவர்களை மீட்கும் பணிகளில் மடூல்சீமை பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.