சாரா உயிருடன் இருக்கின்றாரா இறந்து விட்டாரா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒருவரின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரன் உயிருடன் இருக்கின்றார் என உறுதியாக தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
சாரா என்பவர் உயிரிழந்துவிட்டார் என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் முதலாவதுமரபணு பரிசோதனையின் போது இது உறுதியாகவில்லை எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.
முதலாவது மரபணுபரிசோதனையின் போது சாராவின் தாயரின் மரபணு பரிசோதனையை உடற்பாகங்களுடன் ஒப்பிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது பொருந்தவில்லை என தெரிவித்துள்ள அவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல்பாகங்களை மீண்டும் தோண்டியெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை உடற்பாகங்களே கிடைத்தன என தெரிவித்துள்ள அமைச்சர் கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒவ்வொன்றாக ஆராயவேண்டும் இது இன்னமும் இடம்பெறவில்லை இதன்; காரணமாக சாரா இன்னமும் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.