தமிழகத்தின் பாதியாக மாறுகின்றதா யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணத்தின் வலிகாகம் வடக்கில் அமைந்துள்ள சிறப்புமிக்க குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய புதிய சிற்பதேர் வெள்ளோட்டவிழா நோட்டீஸ் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயம்
அந்த நோட்டீஸில் சைவத்தமிழ் மரபு என வரவேண்டிய இடத்தில் திராவிட மரபு என அச்சடிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் சைவசமயம் மேலோங்கியுள்ள கிராமங்களில் குரும்பசிட்டி கிராமமும் ஒன்றாகும்.
இங்கு பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளபோதிலும் குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆலயமானது கிராமியமும் , சைவமும் தழைத்தோங்கும் குப்பிழான் - குரும்பசிட்டி கிராம எல்லையில் அமைந்துள்ளதால் இரு கிராமத்து மக்களும் அம்மன் ஆலயத்திற்கு வழிபட செல்வார்கள்.
குரும்பசிட்டி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவானது திருவெம்பாவை காலத்தில் இடம்பெறுவது வழமையாகும்.
இந்நிலையில் குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய புதிய சிற்பதேர் வெள்ளோட்டவிழா நோட்டீஸ்ஸில் திராவிட மரபு என குறிப்பிடப்பட்டுள்ளமை தமிழகத்தின் பாதியாக யாழ்ப்பாணம் மாறுகின்றதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.