மசாஜ் நிலையம் சென்ற அயர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த அசம்பாவிதம்
உனவடுன மசாஜ் நிலையமொன்றில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த பெண்ணை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உனவடுன - யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் 38 வயதான அயர்லாந்து பெண்ணிற்கே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள்
அதற்கு உதவியமை தொடர்பில் மசாஜ் மையத்தின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை துன்புறுத்தியதற்காக ஊழியர் கைது செய்யப்பட்டு அதற்கு உதவியதற்காக உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து நாட்டுப் பெண் நேற்று (16) அவ் இடத்திற்கு மசாஜ் செய்துகொள்வதற்காக சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.