இரவு தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இதை மட்டும் பண்ணுங்க
இன்றைய வேகமான உலகில் தூக்கமின்மை என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. தூக்கமின்மை மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? சரியான தூக்கத்தை எவ்வாறு பெற வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
அன்றாட அவசியத் தேவைகளில் ஒன்றாக மனிதனின் தூக்கம் மிக முக்கிய காரணமாக இருகின்றது. உடல் உறுப்புக்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் சீராக இயங்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும். போதிய தூக்கம் இல்லாததால் உங்கள் இதயம் பாதிக்கப்படலாம் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
சரியான தூக்கத்தை பெறுவது எப்படி?
தினசரி சரியான தூக்கத்தை பெற வார இறுதி நாட்களிலும் ஒரே மாதிரியான தூக்க வழக்கத்தை கடைபிடியுங்கள்.
தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், எழுந்திரிப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இரவில் காபி அல்லது எனர்ஜி பானங்கள் போன்றவற்றைக் குடிக்காமல் இருக்கவும், இதனை நீங்கள் இரவு செய்தால் தூக்கத்தை கெடுக்கும்.
உங்கள் படுக்கையறையை நல்ல இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள். மேலும் அதிகம் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இது உங்கள் தூக்கத்தை அதிகப்படுத்தும்.
இரவில் யோகா, அமைதியாக உட்கார்ந்து யோசிப்பது அல்லது உங்கள் தசைகளை ஒவ்வொன்றாக ரிலாக்ஸ் செய்வது போன்ற விஷயங்களைச் செய்வது உங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்க உதவும்.
உங்களுக்கு எப்போதும் தூங்குவதில் சிக்கல் இருந்தால், மருத்துவர் அல்லது தூக்க நிபுணரை சந்திப்பது நல்லது. இது உங்கள் தூக்க பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய உங்களுக்கு உதவும்.
போதுமான தூக்கம் கிடைக்காதது உண்மையில் நம் இதயங்களை பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். சரியாக தூங்காதது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பெரிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இரவில் நன்றாக தூங்கவும், அதே நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.