சவூதியை நோக்கியும் பாயும் ஈரானின் ஏவுகணைகள்
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றான ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வான்வழித் தாக்குதலை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சவூதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில், ஐக்கிய அரபு அமீரக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த ஆளில்லா ஆளில்லா வான்வழி வாகனத்தை சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளனர்.

ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து வந்த ஆளில்லா வானூர்தி, மக்கள் வசிக்காத 'ரூப் அல் காலி' பாலைவனப் பகுதியில் வைத்து இடைமறித்து அழிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மட்டும் (மார்ச் 12) இதே எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை சவூதி இராணுவம் அழித்துள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மேலும் 20 ஆளில்லா வானூர்திகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலால் எண்ணெய் உற்பத்திக்கோ அல்லது பணியாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல் மாலிகி உறுதிப்படுத்தியுள்ளார்.