இலங்கை வந்த ஈரான் பொறியியலாளர் அதிரடி கைது
சுமார் 55 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பணிபுரியும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையில் செயல்படும் அபிவிருத்தி திட்டமொன்றில் பணியாற்றும், ஈரானைச் சேர்ந்த 45 வயதுடைய பொறியியலாளர் என தெரியவந்துள்ளது.

விசாரணை
சந்தேக நபர் ஏர் அரேபியா விமானம் G9502 விமானம் மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையில் இருந்து ஈரானில் உள்நாட்டு பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட 36,860 "பஹ்மான்" சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.