தொடரும் ஈரான்-இஸ்ரேல் போர் ; இஸ்ரேலிய ராணுவத்தில் சோர்வு
இஸ்ரேலிய ராணுவத்திற்குள் சோர்வு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அமன்’ (Aman) மற்றும் ‘யூனிட் 8200’ முன்னாள் அதிகாரிகள், போரை இப்போதே நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி நிர்வாக அனுபவம் குறைவானவர் குடும்பச் சொத்துகளை மட்டுமே கவனித்தவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஒரே நேரத்தில் எதிர்ப்பது கடினம் என உணர்ந்திருக்க வாய்ப்பு இருப்பினும், பழைய மரபுகளுக்கு கட்டுப்படாதவர் என்பதால் அபாயகரமான தலைவராக மாறும் அபாயம் உள்ளது.

2,500 ஏவுகணைகளில் 600 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன நோக்கம்: இஸ்ரேலை ராணுவ ரீதியாக வீழ்த்தாமல் உளவியல் சோர்வில் ஆழ்த்தல் தினமும் சில ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி, பகலில் பதுங்கு குழிகளுக்கு ஓட வைக்கவும், இரவில் தூங்க விடாமல் செய்வதும் இதில் அடங்கும்
பிராந்திய மற்றும் உலகளாவிய தாக்கங்கள்
ஈரான் மேலும் ஆபத்தான நாடாக மாறலாம், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் அபாயம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் அமெரிக்காவின் பி-52 போர் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களின் வருகை போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்
இஸ்ரேலின் வேகம் குறைந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து போரில் முன்வருகிறது. பழிவாங்கும் உணர்வு கொண்ட புதிய தலைவர் மொஜ்தபாவை தலைவராக்கியதுதான் தற்போதைய போரின் முக்கிய சவால் என வாதிகள் கூறுகின்றனர்.