ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு; காமேனிக்கு பிறகு கொல்லப்பட்ட முக்கிய புள்ளி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் பொர் பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளது.
ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில், லரிஜானியின் (Ali Larijani) மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளையும் பாராட்டியுள்ளது.

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி
ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
ஈரானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக அவர் (Ali Larijani) விளங்கியதால், அவரது மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலி லரிஜானி (Ali Larijani) , 2025 ஓகஸ்ட் மாதம் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.