மீண்டும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று (10-02-2023) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில், அடிப்படை உரிமை மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியன குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.