பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அர்ப்பணிப்புக்கு சர்வதேச மட்டத்தில் மீண்டும் அங்கீகாரம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகச் சூழலைப் பேணுவதில் பேராதனை பல்கலைக்கழகம், 2026ஆம் ஆண்டுக்கான UI GreenMetric உலக பல்கலைக்கழக தரவரிசையில் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
உலகின் 110 நாடுகளைச் சேர்ந்த 2,016 பல்கலைக்கழகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தத் தரவரிசையில், பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையில் முதலிடத்தையும், உலகளவில் 200ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தத் தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகம் 8,262.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம், கழிவு மற்றும் நீர் முகாமைத்துவம், போக்குவரத்து, கல்வி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
“நிர்வாகம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் ஊடாக நிலையான வளாகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை தரவரிசை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.