10 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை
பதுளை - எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - பண்டாரவளை வீதியில், தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.