சுகாதார துறைக்கு புதிய சவால் ; இரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் கடும் அழுத்தம்
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 புதிய இரத்தப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் என விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இரத்தப் புற்றுநோயுடன் வாழும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 15,000 முதல் 18,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.

இத்துறையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கான விசேட வைத்திய நிபுணர்களின் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள இரத்தப் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வெறும் நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.